நல்லாட்சி வாரத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, ‘மிஷன் கர்மயோகி – முன்னோக்கி செல்லும் பாதை’ குறித்த பயிலரங்கில் உரையாற்றிய மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், ‘பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பாரதத்திற்கான இலக்கை அடைய, ஆளுகை முறையில் “ஆட்சி” என்பதிலிருந்து “பங்களிப்பு” என்பதற்கு மாறுவது இன்றியமையாத தேவை. குடிமைப் பணியில் இருப்போருக்கு கடமைகளை செவ்வனே ஆற்றும் திறன், மேம்பாட்டு அணுகுமுறை தேவை. அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை திறம்பட தீர்மானித்து, 2047ம் ஆண்டில் சுதந்திரமடைந்த நூற்றாண்டை கொண்டாடும் பாரதத்தை வடிவமைக்கும் வகையில் குடிமை பணிகளுக்கு தொலைநோக்கு பார்வையை வழங்குதே கர்மயோகி இயக்கத்தின் லட்சியம்’ என தெரிவித்தார்.