சென்னை, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கத்தில் ஆயிரம் வருடங்கள் பழமையான தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் பக்தர்களால் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாடம்பாக்கத்தை சேர்ந்த எஸ். ஜெயபால் என்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அறநிலையத்துறை, 1960 முதல் பாதுகாக்கப்பட்டு வந்த கோயில் நிலங்களின் ஆவனங்களில் இதன் விவரங்கள் இல்லை. 2019ம் ஆண்டு பதிவேட்டின் அடிப்படையில் கோயிலுக்கு சொந்தமான புஞ்சை, நஞ்சை என்று மொத்தம் 87.58 ஏக்கர் நிலம் உள்ளது. 2001ல் பட்டா வாங்கப்பட்டுள்ளது. நிலங்களை தானமாக அளித்தோர் விவரங்கள் இல்லை என்று பதில் அளித்துள்ளது. வருவாய் துறையில் விசாரித்தபோது, 87.58 ஏக்கர் நிலங்கள் வெவ்வேறு நிலை அரசு புறம்போக்கு நிலங்களாக இருந்து கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆய்வில் 72.90 ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் 14.68 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கவில்லை என தெரிய வந்துள்ளது. இதன்மூலம் 14.68 ஏக்கர் நிலம் கணக்கில் காட்டப்படாமல் அறநிலையத்துறை அதிகரிகள், அரசியல்வாதிகள் துணையோடு ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?