பஞ்சாப்பில் உள்ள பொற்கோயில் கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சனையில் சர்ச்சையை தூண்டும் விதமாக இங்கிலாந்தை சேர்ந்த சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் கில், பொற்கோயிலில் படுகொலை செய்யப்பட்ட நபரை ஒரு ‘ஹிந்து தீவிரவாதி’ என குறிப்பிட்டார். உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்துக்கள் அவரது பதிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். லண்டனில் உள்ள பாரதத் தூதரகமும் இதற்கு கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து அவர் தனது பதிவை நீக்கினார். பிறகு அந்த செயலையும் அதனால் நடைபெற்ற படுகொலை சம்பவத்தையும் கண்டித்து புதிய பதிவிட்டார். இதற்கிடையே, தங்கள் அதிகார வரம்பை மீறி, இத்தகைய கும்பல் கொலைகளை ஆதரித்த இங்கிலாந்து எம்.பியின் செயலை கண்டித்து பதிவிட்டார் கர்நாடக மாநிலம் உடுப்பியில் தற்போது வசிக்கும் முன்னாள் ஆக்ஸ்போர்டு மாணவி ரஷ்மி சமந்த். இதனால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.