800 குளங்கள் விடுபட்டுள்ளன

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது, பவானி ஆற்றில் இருந்து உபரி நீரை உறிஞ்சி, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விடப்படும் என்பதுதான் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். 1,800 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இது பல நீர்நிலைகளுக்கு தண்ணீரை அனுப்ப உதவும். இந்நிலையில், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 800 குளங்கள் விடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த 800 குட்டைகளையும் நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிராமங்கள் வெகுவாகப் பயனடையும். விவசாயமும் தழைக்கும். ஆகவே விடுபட்ட குட்டைகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.