சமீபத்தில் பாரதம் ‘பிரளய்’ என்ற குறைந்த தூர ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடைத்தியுள்ளது. சுமார்1 டன் எடையுடைய வெடிபொருளை சுமந்து 500 கி.மீ தூரம் சென்று துல்லியமாக தாக்கும் சக்தி கொண்டது பிரளய். இது செல்லும்போது தனது பாதையை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது.
தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வாரியமான டி.ஆர்.டி.ஓ தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளை சமீப காலமாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இவ்வருடத்தில் செய்யப்பட்ட ஏவுகணை சோதனைகளின் சிறிய தொகுப்பு…
ஆகாஷ் என்.ஜி – இவ்வருட துவக்கத்தில் ஜனவரி 25ல் டி.ஆர்.டி.ஓ ஆகாஷ் என்.ஜி என்ற அடுத்த தலைமுறை ஏவுகணையை சோதனை செய்தது. குறைந்த ரேடார் கிராஸ் செக்ஷன் கொண்ட வளைந்து நெளிந்து சென்று இலக்கை அழிக்க இந்த ஏவுகணை விமானப்படைக்கு உதவும். மீண்டும் இது 23 ஜூலையில் சோதனை செய்யப்பட்டது.
ஹெலினா – பிப்ரவரி மாதத்தில் ராணுவத்திற்கான ஹெலினா டேங்க் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதித்தது.
துருவாஸ்திரா – இதே காலகட்டத்தில் விமானப்படைக்கான துருவாஸ்திரா ஏவுகணையும் பாலைவனப்பகுதியில் சோதனை செய்யப்பட்டது.
வி.எல் – எஸ்.ஆர்.எஸ்.ஏ.எம் – பிப்ரவரி மாதம் இந்திய கடற்படைக்கான செங்குத்தாக ஏவப்படும் குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணையான வி.எல் – எஸ்.ஆர்.எஸ்.ஏ.எம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மீண்டும் அக்டோபரில் மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
எஸ்.எப்.டி.ஆர் – கடந்த மார்ச் மாதம் டி.ஆர்.டி.ஓ ஏவுகணைக்கான சாலிட் பியூயல் டக்டட் ரேம்ஜெட் (எஸ்.எப்.டி.ஆர்) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்தது.
மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் – ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக 25 ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. இது 45கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க வல்லது.
அக்னி பிரைம் – கடந்த ஜூன் மாதத்தில் அக்னி – பி அடுத்த தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 1000 முதல் 2000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.
ஆகாஷ் பிரைம் – கடந்த செப்டம்பரில் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் சோதனை செய்யப்பட்டது. ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியழித்தது.
அக்னி 5 – 5,000 கி.மீ தூரம் பயணித்து கண்டம் விட்டு கண்டம் சென்றுத் தக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனை கடந்த அக்டோபரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சீனாவை மிரளவைத்தது குறிப்பிடத்தக்கது.
டார்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை – நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து மாற்றொரு நீர்மூழ்கி கப்பலையோ அல்லது போர் கப்பலையோ தாக்க, டார்பிடோவுக்கு மாற்றாக ஏவுகணை மற்றும் டார்பிடோவாக செயல்படும் அதிநவீன டார்பிடோ சூப்பர்சோனிக் ஏவுகணை டிசம்பரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஸ்மார்ட் ஏவுகணை – டிசம்பர் 12ல் கப்பலில் இருந்து பயன்படுத்ததக்க தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
சந்த் ஏவுகணை – டிசம்பர் 12ல் ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடியது 10 கி.மீ தூரம் சென்றுத்தாக்கும் குறுகியதூர சந்த் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது பிரளய் சோதித்து பார்க்கப்பட்டது. இதைத்தவிர, 70 மற்றும் 90 கி.மீ தூரம் சென்று பல இலக்குகளைத் தாக்கும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட், தூரம் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ், ஆரம்பக்கட்ட ஹைப்பர் சோனிக் ராக்கெட் தொழில்நுட்பம் போன்றவையும் சோதித்துப் பார்க்கப்பட்டு உள்ளன.