கேரளாவின் ஆலப்புழாவில் கடந்த சனிக்கிழமை இரவு, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயலாளர் ஷான் யாரோ சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த பழியை பா.ஜ.க மீது போட்டு அடுத்த 12 மணி நேரத்துக்குள் பா.ஜ.கவின் ஓ.பி.சி பிரிவு செயலாளர் ரஞ்சித் சீனிவாசை ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் எஸ்.டி.பி.ஐ பயங்கரவாதிகள் வெட்டி கொன்றனர். மனைவி, தாய் கண்முன்பாகவே இந்த கொலை நடந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த கொலைகளால் கேரளாவில் பதற்றம் ஏற்பட்டது. வழக்கு விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க கேரள பா.ஜ.க வலியுறுத்தியது. ஆலப்புழா மாவட்டம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் சோதனை நடத்தி பலரையும் விசாரித்தனர். இந்நிலையில், பா.ஜ.கவின் ரஞ்சித் கொலை தொடர்பாக ஆசிஃப், அலி அகமது, நிஷாத், அர்ஷத் நவாஸ், சுதீர் ஆகியே ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது.