கபிலா பிரசார திட்டம்

மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ‘அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு மற்றும் சுரண்டல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும், உயர் கல்வி நிறுவனங்களில் அறிவுசார் சொத்துரிமைக்கு விண்ணப்பிப்பதை ஊக்குவிக்கவும், அறிவுசார் சொத்துரிமை பற்றிய அறிவு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை ஊக்குவிக்கும் அறிவுசார் சொத்து எழுத்தறிவு மற்றும் விழிப்புணர்வுக்கான கலாம் திட்டம் (கபிலா பிரச்சார திட்டம்) மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. இதற்காக கபிலா இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.பி கிளினிக், ஆய்வு கட்டுரைகள், புத்தாக்கம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை, ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேசிய அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு வாரம் ஆகியவை நடத்தப்படுகின்றன. கபிலா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு 46,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்’ என தெரிவித்தார்.