ஜார்க்கண்ட் மாநிலத்தின் விஷ்வஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் கலரி தொகுதியின் தலைவர் முகேஷ் சோனி, டிசம்பர் 15 அன்று, தனது நகைக்கடையை மூடிவிட்டு திரும்பும் போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த ஜார்கண்ட் மாநில பா.ஜ.க, வி.ஹெச்.பி தலைவர்கள் இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். யூனுஸ் அன்சாரி மற்றும் பிரின்ஸ் கான் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதாக சோனியில் தந்தை வாக்குமூலம் அளித்தர். இதனையடுத்து அவர்களை தேடிய காவல்துறையினர், யூனுஸ் அன்சாரியை கைது செய்துள்ளனர். பிரின்ஸ் கானைத் தேடி வருவதாக கூறியுள்ளனர். வழக்கில் மிக முக்கிய ஆதாரமான யூனுஸ் பயன்படுத்திய தொலைபேசி கைப்பற்றப்பட்டது. ஏற்கனவே, சட்டவிரோத ஆயுத பேர வழக்கில் யூனுஸ் தேடப்பட்டு வந்தவர். சோனியின் புகாரின் பேரில் யூனுஸின் சட்டவிரோதமாக கட்டிய வீடு இடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த யூனுஸ் கொலை செய்ய திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.