ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீடு

தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு அனைவரையும் உட்படுத்திய, உறுதியான, நீடிக்கவல்ல வீட்டுவசதி அளிக்க 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவிக்கு மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் பாரதத்திற்கான இயக்குனர் டாக்கியோ கொனிஷியும் கையெழுத்திட்டனர். இந்த திட்டம் மத்திய அரசின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாடு குறித்த கொள்கைகள் குறிப்பாக நகர்ப்புறத்தில் உள்ள அனைவருக்கும் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடுகள் ஆகியவற்றை இணைத்ததாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் குடியிருக்கும் ஏழை மக்களின் தகுதியான குடும்பங்களுக்கு வீட்டுவசதி அளிப்பதன் மூலம் பற்றாக்குறை சரிசெய்யப்படும். குறைந்த விலையில் வீட்டு வசதி செய்து தருவதில் தனியார் துறை முதலீட்டையும் ஊக்குவிக்கும். இத்திட்டத்தில் ஒன்பது இடங்களில் வீடுகள் கட்டப்படும். சுமார் 6,000 வீடுகள் ஆபத்தான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்படும். திட்டமிட தமிழக நகர்புறபுறத் திட்டமிடலுக்கு உதவி செய்யும்.