நதி விழாக்கள்

ஆண்டுக்கு ஒரு முறை நதி விழாக்களை கொண்டாட வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 26ல் ‘மனத்தின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதையடுத்து கங்கையை சுத்தப்படுத்துவதற்கான தேசிய இயக்கம் கங்கா உத்சவ் என்ற நதி விழா அனைத்து நதிகளிலும் நடத்தப்பட்டது. இந்த நதி உத்சவம் நாடு முழுவதும் 2021, டிசம்பர் 16ல் துவங்கி டிசம்பர் 23 வரை கொண்டாடப்படும். இது ஜல்சக்தி அமைச்சகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும் இவ்விழாக்கள் நடத்தப்படுகின்றன. நதி உத்சவம் 2021 நிகழ்ச்சிக்கு, 10 முக்கிய நிதிகள் உட்பட இதர நதிகளையும் கொண்டாட 22க்கும் மேற்பட்ட மாநிலங்களில், 170க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மத்திய மற்றும் மாநில அளவிலான அமைப்புகள், துறைகள், மாவட்ட நிர்வாகங்களின் உதவியுடன், இந்த கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இதில் பள்ளி மாணவர்கள், நேரு யுவ கேந்திர அமைப்பினர், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் என பல தரப்பினரும் இதில் பங்கேற்றனர். மரக் கன்றுகள் நடுதல், சுத்தப்படுத்தும் பணிகள், கங்கா ஆரத்திகள், வரைபட போட்டிகள், வாசகங்கள் எழுதுதல், நதி பூஜைகள், படகு போட்டிகள், கதை சொல்லும் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் நதி மகோத்ஸவத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.