சென்னை ஐ.ஐ.டி கண்டிபிடிப்பு

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி) ஆராய்ச்சியாளர்கள், வேகமான மற்றும் திறமையான ‘மோஷன் பிளானிங்’ அல்காரிதம்களை உருவாக்கியுள்ளனர். இவை மனிதர்களைப் போலவே சிந்திக்க, தடையை கடந்து செல்ல, சுயமாக வான்வழி, தரை உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை இயக்க உதவும். இதில், தன்னியக்க வாகனங்களுக்கான பாதுகாப்பான மற்றும் ஆற்றல்மிக்க சாத்தியமான பாதையைத் திட்டமிடுவதற்கு உதவும் வகையில், ‘பொதுவாக்கப்பட்ட வடிவ விரிவாக்கம்’ (ஜி.எஸ்.இ) என்ற புதிய கருத்தாக்கத்தின் அடிப்படையில் அல்காரிதம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறைகள் தற்போதுள்ள பல செமினல் மற்றும் அதிநவீன இயக்க திட்டமிடல் வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது மிகச் சிறந்த முடிவுகளைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஓட்டுநர் இல்லா வாகனங்கள், பேரிடர் மேலாண்மை, தேடல், மீட்பு, ஐ.எஸ்.ஆர் செயல்பாடுகள், வான்வழி டிரோன் டெலிவரி, கிரகங்கள் ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியும் என கூறப்பட்டு உள்ளது. கோட்பாட்டு மேம்பாடு, ஜி.எஸ்.இ அடிப்படையிலான அல்காரிதம்களின் மேம்பாடு, விரிவான யதார்த்தமான உருவகப்படுத்துதல் அடிப்படையிலான சரிபார்ப்பு ஆகியவை இந்த ஆராய்ச்சியின் தற்போதைய நிலையாக உள்ளது. எதிர்காலத்தில் ஆளில்லா வான்வழி மற்றும் தரை வாகனங்களில் இந்த வழிமுறைகளை செயல்படுத்த ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராய்ச்சியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.