மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மாநிலங்களின் மகளிர் காவல் தன்னார்வலர்கள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த தன்னார்வலர்கள், துன்பத்திலிருக்கும் பெண்களுக்கு உதவ காவல்துறைக்கும் சமுதாயதத்திற்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறார்கள். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் தங்கள் மாநிலங்களில் இந்த முறையைப் பின்பற்ற முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மற்றும் கர்நால் மாவட்டத்தில் இந்த நடைமுறையை நாட்டிலேயே முதல் தடவையாக பின்பற்றியுள்ளது.