பா.ஜ.க தலைவர் கொலை

கேரள பா.ஜ.கவின் கமிட்டி உறுப்பினராகவும், ஓ.பி.சி மோர்ச்சா அமைப்பின் மாநில செயலாளராகவும் உள்ள ரஞ்சித் சீனிவாசன் என்பவரை அவரது வீட்டில் புகுந்த எஸ்.டி.பி.ஐ கட்சி உறுப்பினர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் அரசியல் முகம்தான் எஸ்.டி.பி.ஐ கட்சி. வழக்கறிஞரான ரஞ்சித் கடந்த 2016ம் ஆண்டு ஆலப்புழா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்டார். இதே மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ மாநில அளவிலான தலைவர் ஒருவர் வேறு யாரோ சிலரால் கொல்லப்பட்ட சில மணிநேரங்களில், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இது, கொலைப்பழியை பா.ஜ.கவினர் மீது சுமத்தி தப்பிக்கும் நினைக்கும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் சதி செயலாகவே சந்தேகிக்கப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய பாலக்காடு பா.ஜ.க மாவட்டத் தலைவர் கே.எம்.ஹரிதாஸ், இச்சம்பவம் எஸ்.டி.பி.ஐ’யின் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் கொலை. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு எஸ்.டி.பி.ஐ’க்கு ஆதரவளிக்கிறது என குற்றம்சாட்டினார்.