நிதி ஆயோக் எச்சரிக்கை

பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக 93,045 கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதிக தினசரி எண்ணிக்கையாகும். ஏனெனில் கொரோனாவின் ஓமைக்ரான் மாறுபாடு நாடு முழுவதும் தொற்றுநோய்களின் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. இதேபோல், 80 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ள பிரான்சில் தினசரி 65,000 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. குளிர்காலம், கிறிஸ்துமஸ் விடுமுறை, புத்தாண்டு காரணமாக மக்கள் மேற்கொளும் பயணம், கேளிக்கை விருந்துகளால் பாரதத்தின் மக்கள்தொகை சூழலில் நமது நாட்டில் தினசரி கொரோனா எண்ணிக்கை 13 முதல் 14 லட்சமாக உயரக்கூடும். அத்தகைய சூழ்நிலை இங்கு உருவாகாமல் இருக்க நாம் முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையை திறம்பட எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் சுகாதார டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார்.