முத்தாஹிதா க்வாமி இயக்கத்தின் தலைவர் அல்தாஃப் ஹூசைன் ஐ.நா சபை, இங்கிலாந்து மற்றும் பாரதத்திற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கோரிக்கையில், பலூச்சிஸ்தான் மற்றும் சிந்த் மாகாணங்களை பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அங்கு பல மனித உரிமை மீறல்களையும் கொடுமைகளையும் அரங்கேற்றி வருகிறது. இந்த இரண்டு மாகாணங்களின் தலைவர்களும் பாகிஸ்தான் அரசுக்கு ஏஜண்டுகளாக செயல்படுகின்றனர். அவர்கள் விலை போய்விட்டனர். பலூச்சிஸ்தான், சிந்த் மாகாணங்களின் வளங்களை பாகிஸ்தான் அரசும் ராணுவமும் சுரண்டி வருகின்றன. பாரதம் இந்த இரண்டு மாகாணங்களின் விடுதலைக்கு உதவும் பட்சத்தில், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பாரதத்துடன் இணைய விரும்புகிறோம்’ என தெரிவித்து உள்ளார்.