சௌதி அரேபிய அரசு சில நாட்களுக்கு முன், தப்ளிக் ஜமாத் அமைப்பின் ஆபத்துகளை உணர்ந்து அதனை தடை செய்தது. தப்ளிக் ஜமாத் பயங்கரவாதத்தின் நுழைவு வாயில்களில் ஒன்று, சமுதாயத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் என கூறியது. மேலும் இது குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும், தப்ளிக் ஜமாத்திடம் இருந்து விலகி இருக்குமாறு மக்களை எச்சரிக்க வேண்டும் என அதன் மௌலானாக்களுக்கு உத்தரவிட்டது. இதற்கு பாரதத்தில் உள்ள தாருல் உலூம் தியோபந்த், ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் உள்ளிட்ட பல முஸ்ளிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. சௌதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டன.