பிரபல யூடியூபரும் சிறந்த தேசியவாதியுமான மாரிதாசை காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு, சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டார் எனக்கூறி பொய் வழக்கு போட்டு கைது செய்தது. இவ்வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றம், ஜெயலலிதா மரணம் குறித்தும் முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்தும் சுப்பிரமணிய சுவாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என கேட்டு மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என கூறி வழக்கை ரத்து செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என தெரிந்துகொண்ட தி.மு.க அரசு, மாரிதாசை எப்படியும் சிறையில் வைத்தே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு, போலி இ மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கடந்த 2020ல் புனையப்பட்ட ஒரு வழக்கை தூசு தட்டி எடுத்து, அதில் மீண்டும் மாரிதாசை கைது செய்துள்ளது. இதற்கு முன்னரே தகுந்த ஆதாரங்களுடன் மாரிதாஸ் விளக்கம் அளித்துள்ளார் என்பதால், வழக்கம்போல அந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிற்காது என சமூக ஊடகவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.