பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியாகவும் 2013வரை முன்னாள் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர் ரெஹ்மான் மாலிக். இவர் ஜியோ நியூஸ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், ‘அமித் ஷா பிரதமராக வேண்டும் என்பதற்காகவே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இதற்குப் பின்னால் தமிழகமும் தமிழ் ஈழ பயங்கரவாத அமைப்பும் இருக்கின்றன. தமிழகத்திற்கு அவர் செய்த கொடுமைகளால் அவர் தமிழர்களின் முக்கிய இலக்காகிவிட்டார் என மறைமுகமாக தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசையும் சேர்த்து குற்றம் சாட்டினார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாரதத்தில் உள்ள ராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அது பாகிஸ்தான் ராணுவத்தைப் போல் இல்லை. அதிகாரத்தைப் பிடிப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை என ரெஹ்மான் மாலிக்கிற்கு நினைவூட்டினார்.
உடனே தனது பேச்சை மாற்றிய ரெஹ்மான் மாலிக், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பை நாங்கள் ஒழித்துவிட்டோம். அவர்கள் திரும்பி வந்தனர். பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் இ தலிபான்களுக்கு பாரதம் நிதியுதவி அளிக்கிறது என கூறினார்.
மீண்டும் பிபின் ராவத் மரணம் குறித்து பேச ஆரம்பித்த அவர், இதேபோல தமிழகமும் வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தது. அந்த வாய்ப்பு கிடைத்தவுடன் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்கு உள்ளாக்கப்பட்டது. அவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். ராஜீவ் காந்தியையும் அவர்கள்தான் கொன்றார்கள். தமிழ்ப் போராளிகள் (விடுதலைப் புலிகள்) இலங்கையில் அழிக்கப்பட்ட பிறகு பாரதத்தில் இருந்து ரகசியமாகச் செயல்படுகிறார்கள் அவர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சரே இப்படி நேரடியாக குற்றம்சாட்டும் நிலையில், இதற்கு தமிழக அரசு, விடுதலைபுலி ஆதரவாளர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் அமைப்புகள் என்ன சொல்லப்போகின்றன?