தமிழ்நாடு கோயில் மனைகளில் குடியிருப்போர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகம் முழுதும் கோயில்களுக்கு சொந்தமான மனைகளில், அனுமதியுடன் வாடகைதாரராக குடியிருக்கிறோம். இதில், வாடகை நிர்ணயம், மாற்றம், வசூலித்தல் தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பிரச்னைகள் எழுகின்றன. இந்த புகார்கள் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், ஆணையர் தலைமையிலான நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன. இதில், பெரும்பாலான சமயங்களில் அதிகாரிகள் மீது தான் குற்றச்சாட்டு எழுகிறது. இதை, அதே துறை உயர் அதிகாரிகள் விசாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இத்துறை நீதிமன்றங்களை நீதித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது.