நீலகிரி அருகே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் இங்கு தங்கி பயிற்சி பெறுகின்றனர். ஆண்டுதோறும் இங்கு சிவராத்திரி வெகு விமர்சியாகக் கொண்டாடப்படும். அப்போது அமைச்சர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அங்குச் செல்வது வழக்கம். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஈஷா யோகா மையம், காட்டுப் பகுதிகளையும், யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் பல ஆண்டுகளாக பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இதனை ஈஷா யோகா மையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. கிறிஸ்தவ மதமாற்றம், போலி திராவிட நாத்திகவாதங்களுக்கு ஈஷா மையம் தடையாக இருப்பதால் இதனை முடக்க பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதில் இந்த குற்றச்சாட்டும் ஒன்று. இந்நிலையில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதி ஆக்கிரமிப்பும் செய்துள்ளதா என்ற தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தமிழக அரசு, ஈஷா அறக்கட்டளை & ஈஷா யோகா மையம் வனப்பகுதிகள் எதையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ஈஷா யோகா மையம் அமைந்துள்ள இடத்தில் யானைகள் வழித்தடம் எதுவும் இல்லை என்று தெரிவித்து உள்ளது. தி.மு.க தலைமையிலான தமிழக அரசு அளித்துள்ள இந்த பதில், இவர்களின் பொய்யான வாதங்களை உடைத்தெறியப்பட்டு உள்ளன.