முன்னணியில் பாரதம்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, பாரதம், சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்தும் உறுப்பு நாடுகளாக உள்ளன. பிரிக்ஸ் எகனாமிக் புல்லட்டின் – 2021 என்ற இவற்றின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில், இந்த உறுப்பு நாடுகளிளேயே, பாரதத்தின் பொருளாதார மீட்சி அதிகமாகவும் முன்னணியிலும் இருக்கும். பாரதம் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான விரிவாக்க நிதி முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றை செயல்படுத்தி வருகின்றன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.