பொது சிவில் சட்டம் வேண்டும்

மக்களவையில் பிஜு ஜனதாதளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பார்த்ருஹரி மகதாப் பேசுகையில், ‘நமது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், அப்போது நாடு பிரிவினையை சந்தித்ததால், பழைய முறையே தொடர முடிவு செய்யப்பட்டது. தற்போது சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, அரசு இப்போது இதுகுறித்து ஆலோசித்து பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும். சமீபத்தில், டெல்லி, அலகாபாத் ஐகோர்ட்டுகள் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளன’ என்று பேசினார்.