பிரிவினைவாதிகளுக்கு கண்டனம்

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, விவசாய போராட்டத்தால் மத்திய அரசு அச்சட்டங்களை திரும்ப்ப் பெற்றது. இதேபோல, ஜம்மு காஷ்மீரின் சிரப்பு சட்டத்திற்கு மீண்டும் அப்பகுதி மக்கள் போராட வேண்டும். இச்சட்டங்கள் இல்லாமல் இங்கு வாழ்வது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது என கூறினார். பி.டி.பி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்துகையில், ‘மக்கள் மீது அரசு அடக்குமுறை நடத்துகிறது, அப்பாவிகள் கொல்லப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று பேசினார்.

ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கு கண்டனம் தெரிவித்த மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரும் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் (எம்.ஆர்.எம்) புரவலருமானர் இந்திரேஷ் குமார், ‘பரூக் அப்துல்லா அமைதியை விரும்புவதாக தெரியவில்லை. மாறாக அவர் வன்முறையை விரும்புகிறார் என்பதையே அவரது பேச்சுகள் காட்டுகின்றன. அவருக்கு பாரதத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அவர் நாட்டை விட்டு வெளியேறி, உலகின் வேறு எந்தப் பகுதியிலும் சென்று வாழலாம். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க சீனாவின் உதவி கோரப்படும் என்று பரூக் அப்துல்லா முன்பு கூறியிருந்தார். நாம் யாராவது அதை ஏற்றுக்கொள்வோமா? ஒருபோதும் இல்லை, அது முட்டாள்தனம். தற்போதெல்லாம் பொய் சொல்வது மெகபூபா முப்திக்கு ஒரு நாகரீகமாகவே மாறிவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவர்களான இருவரும் ஆத்திரமூட்டும், பதற்றம் ஏற்படுத்தும் அரசியல் விளையாட்டுகளை விட்டுவிட்டு நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதில் அக்கறை செலுத்த வேண்டும்’ என கருத்துத் தெரிவித்தார்.