பொதுத்துறை வங்கிகள் கடந்த மூன்று நிதியாண்டுகளில் ரூ. 4.18 லட்சம் கோடி ரூபாயை, மோசடி பேர்வழிகள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து மீட்டுள்ளது. மேலும், ரூ. 1 லட்சம், அதற்கும் மேற்பட்ட பணம் திருப்பி செலுத்தாத மோசடி குற்றங்களும் குறைந்துள்ளது. கடன் தொகையைச் சமாளிப்பதற்கும், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து அதனை மீட்பதற்கும் அரசு விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது, 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெறும் நிறுவன இயக்குநர்களின் பாஸ்போர்ட்டின் சான்றளிக்கப்பட்ட நகலை வங்கிகள் ஆதாரமாகப் பெறுவது போன்றவை செயல்படுத்தப்பட்டு உள்ளன என, நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தெரிவித்தார்.