பஞ்சாப் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பலியாவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேச கிசான் காங்கிரஸின் பொறுப்பாளர், கட்சியின் மூத்த ஊடக குழு உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர். கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், ‘காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை தவறான கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ஒரு செய்தித் தொடர்பாளராக, சித்துவின் பாகிஸ்தானுடனான உறவுகள், முட்டாள்தனமான மற்றும் கட்சிக்கு எதிரான கருத்துக்களுக்கு பொதுவெளியில் பதிலளிப்பது கடினம். கேப்டன் அமரீந்தர் சிங், சுனில் குமார் ஜாக்கரின் தலைமையில் 2022ல் ஆட்சி அமைக்க நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், நீங்கள் சித்துவை தேர்வு செய்ய முடிவு செய்தீர்கள். சீக்கிய கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லருக்கு காங்கிரஸ் முக்கிய பொறுப்புகளை அளித்தபோது நானும் காயப்பட்டேன்’ என தெரிவித்துள்ளார்.