படுகொலையை நியாயப்படுத்தும் அமைச்சர்

இலங்கையை சேர்ந்த பிரியந்த குமார பாகிஸ்தானின் சியால்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ‘தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான்’ என்ற முஸ்லிம் மதவெறி அமைப்பை சேர்ந்த ஒரு கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார். கொலையை நியாயப்படுத்த அந்த கும்பல் பொய்யான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அனைத்து எலும்புகளும் சுக்குநூறாக அடித்து உடைக்கப்பட்டுள்ளன. உடல் 90 சதவீதம் எரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு கொடூரமான அந்த கொலையை நியாயப்படுத்தும் விதத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் பேசியுள்ளார். ‘அந்தக் கும்பல் குமாரை உணர்ச்சிவசப்பட்டு கொன்றது. குழந்தைகள் வளரும்போது, ​​அவர்கள் உற்சாகமாகி, உணர்ச்சிகளின் வெளிப்பாடாகச் செயல்படுகிறார்கள்’ என பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்த பயங்கரவாதிகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த பாகிஸ்தான் அரசு, தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் மீதான தடையை கடந்த நவம்பர் 8ம் தேதி நீக்கியது என்பது நினைவுகூரத்தக்கது.