ஸ்மார்ட் மீட்டர் பொருத்துதல், ஒட்டுமொத்த மின்சார விநியோக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி உதவி, புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம் குறித்து விவாதிக்க மாநில மின் அமைச்சர்களுடன் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில், வடகிழக்கு பகுதி உட்பட நாடு முழுவதும் மின்சாரம் கிடைப்பது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் முறையே ஒரு நாளைக்கு சராசரியாக 21 மணி நேரம் மற்றும் 23 மணி நேரமாக அதிகரித்துள்ளது. மின்துறை கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் ஆகியவற்றில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மின்சாரம் திறவுகோலாக உள்ளது நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதும், மின் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக பாரதத்தை உயர்த்துவதே இதன் நோக்கம்’ என தெரிவித்தார்.