டிராபிக் சலான் வருமானம் அதிகரிப்பு

மோட்டார் வாகனங்கள் திருத்தச் சட்டம், 2019 அமல்படுத்தப்பட்ட பிறகு பாரதத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கப்படும் டிராபிக் சலான்களின் எண்ணிக்கை 291 சதவீதம் அதிகரித்துள்ளது. இச்சட்டம் அமலாக்கப்படுவதற்கு முந்தைய 23 மாதங்களில் வழங்கப்பட்ட மொத்த போக்குவரத்து சலான்களின் எண்ணிக்கை 1,96,58,897. சட்டம் நடைமுறைக்கு வந்த 23 மாதங்களில் இதன் எண்ணிக்கை 7,67,81,726 என உயர்ந்துள்ளது. போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை 3.8 சதவீதமும் இறப்புகளின் எண்ணிக்கை 0.2 சதவீதமும் குறைந்துள்ளது. சாலைப் பாதுகாப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளாகும் இடங்களைக் கண்டறிந்து சரிசெய்தல், சாலைப் பாதுகாப்பை சாலை வடிவமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுதல், வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்கள், சீட் பெல்ட் நினைவூட்டல், பாதுகாப்புத் தரங்களைக் கட்டாயமாக்குதல், மேனுவல் ஓவர் ரைடு, வேக எச்சரிக்கை அமைப்புகள், ரிவர்ஸ் கியர் சென்சார், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால பணமில்லா சிகிச்சை, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ்கள் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.