பாதிரிக்கு சலுகை அளித்த நீதிமன்றம்

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கஞ்சேரி. அங்கு டேட்டா என்ட்ரி பணிக்கு வந்த ஒரு சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவை உலுக்கியது. இவரால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். இந்த புகாரில் 2017ல் ராபின் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த கேரள கீழமை நீதிமன்றம் 2019ல் குற்றவாளியான பாதிரிக்கு 20 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 20 ஆண்டுகள் சிறை தண்டனையை, 10 ஆண்டுகளாக குறைத்துவிட்டுள்ளது. இதற்கிடையே, ராபின் வடக்கம்சேரியால் பாதிக்கப்பட்ட சிறுமி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு தற்போது 18 வயது முடிந்துவிட்டது. என்னை பலாத்காரம் செய்த ராபின் வடக்கம்சேரியை திருமணம் செய்ய விரும்புகிறேன். அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். அம்மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. எங்கோ உத்தர பிரதேசம், காஷ்மீரில் நடக்கும் பெண் உரிமை மீறல்களுக்கு எல்லாம் குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்கள், சொந்த மாநிலத்திலும் அண்டை மாநிலங்களிலும் நடக்கும் இது போன்ற உரிமை மீறல்களுக்கு கருத்து தெரிவிக்கவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.