திருவண்ணாமலையில் குபேர லிங்க கிரிவலம் வருவதற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். வழக்கம்போல கொரோனா பரவல் இதற்கு காரனமாக காட்டப்பட்டுள்ளது. கட்சி நிகழ்ச்சிகள், சினிமா, அரசு நிகழ்ச்சிகள், முதல்வர் மழைவெள்ள சுற்றுப்பயணம் என அனைத்திலும் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவது இல்லை என்பதை உலகே அறியும். இந்நிலையில், கொரோனா பரவலை காரணம்காட்டி ஹிந்துக்களின் வழிபாடுகளில் ஒன்றான கிரிவலத்திற்கு தடை விதித்திருப்பது தமிழக அரசின் ஒருசார்பு மனநிலையையே காட்டுகிறது. அப்படி கட்டுப்பாடுகள் விதித்துத்தான் ஆக வேண்டும் என்றால், கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமாவது கிரிவலம் செல்ல அனுமதித்து இருக்கலாமே? விரைவில் கிறிஸ்துமஸ் வரவுள்ளது. அப்போது, கிறிஸ்தவர்கள் நடத்தும் ஊர்வலம், வழிபாடு, கொண்டாட்டங்களின்போது, தமிழக அரசு என்ன செய்யப்போகிறது, எதனை தடுக்கப்போகிறது, எப்படி தடுக்கப்போகிறது என்பதை எல்லாம் பார்க்கத்தானே போகிறோம்?