ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டி தரவேண்டும் என்ற பிரதமரின் வீட்டு வசதி திட்டம், கடந்த 2016 நவம்பரில் துவங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 1 கோடியே 63 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக்குள் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.