பாரதமாதா கண்காட்சி

சுதந்திரத்தின் 75வது வருட கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, தேசிய கலைப் பயிற்சி நிறுவனமான லலித் கலா அகாடமியில், ஒரு வார கால கண்காட்சியை, மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி தொடங்கிவைத்தார். லலித் கலா அகாடமி, கமல் கலைகூடத்துடன் இணைந்து,‘பாரத மாதா மற்றும் பாரதத்தின் நாயகன்‘ என்ற தலைப்பிலான ஒருவாரகால கண்காட்சியை அமைத்துள்ளது. இந்தக் கண்காட்சியில், பிரபல கலைஞர் பவன் வர்மா ‘ஷாகீன்’ வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. லலித்கலா அகாடமியின் தற்காலிகத் தலைவர் டாக்டர் உத்தம் பச்சார்னே மற்றும் கமல் கலைக்கூடத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கமல் சிப் ஆகியோர் முன்னிலையில், இந்தக் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர், சர்தார் வல்லபாய் படேல், ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியை 18 – 24 நவம்பர் 2021 வரை கால 11 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.