கேரளாவில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஒரு காரியகர்த்தரான சஞ்சித், அவர் மனைவியின் கண் முன்பாகவே எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த முஸ்லிம் பயங்கரவாதிகளால் 36முறை கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இச்செய்தியை பல ஊடகங்கள் வெளியிடாமல் மறைத்துவிட்டன. ஜனம் டி.வி, ரிபப்ளிக் தொலைக்காட்சி போன்ற விரல்விட்டு எண்ணத்தக்க ஊடகங்களே இச்செய்தியை வெளியிட்டன. இந்நிலையில், இச்செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா, துணுக்கு செய்தியாக, இருவேறு செய்தியாக மூன்று பதிப்புகளில் மாற்றி வெளியிட்டது. கேரள பதிப்பில், ‘பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்டார். அவரை சிலர் வாள்களால் தாக்கி கொன்றனர். முதற்கட்ட விசாரணையில் இது அரசியல் கொலை என தெரியவந்துள்ளது’ என்ற விதத்தில் செய்தி வெளியானது. தமிழகம் உட்பட மற்ற பதிப்புகளில், சாலை விபத்தில் சஞ்சித் இறந்ததாக செய்தி வெளியிடப்பட்டது. இதுதான் இவர்களின் ஊடக நடுநிலையும் ஊடக தர்மமும்.