குடும்ப மதிப்புகள் தொடர வேண்டும்

கொல்கத்தாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், மணிக்தலாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ‘மக்கள் தங்கள் குடும்ப மதிப்புகளை இழந்து, குடும்பத்தின் ஒரு முக்கிய பகுதியை தவறவிடுவது கவலை அளிக்கிறது. இதில் கலாச்சாரம், நம்பிக்கைகள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அளிக்கப்படுகிறது. இன்றைய பிஸியான வாழ்க்கைச் சுழற்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில்லை, இது சமூகத்திற்கு நல்லதல்ல. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பொறுப்பேற்க வேண்டும். நமது வீடுகளில் வேலை செய்பவர்கள், முடி திருத்துபவர்கள் போன்றோரை மதிக்கவும், அவர்களை அத்தை, மாமா என உறவு சொல்லி அழைத்து பேசவும் மக்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களை மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். மனித நேயத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்த ஏழைகள், தேவைப்படுபவர்களுக்கு உணவு, உடை அத்தியாவசியப் பொருட்களை அன்புடன் விநியோகிக்க ஊக்குவிக்க வேண்டும். வீட்டில் உள்ள நோயாளிகள், முதியவர்களுக்கு முதலில் உணவு கொடுப்பது போன்ற விஷயங்களை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தந்தை ஏன் கிழிந்த சட்டை அணிந்துள்ளார், ஆனால் குழந்தைகளுக்கு அவர் புதிய பள்ளி சீருடைகளை ஏன் வாங்கினார் என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு ஆரோக்கியமான குடும்பம் அவசியம்’ என வலியுறுத்தினார்.