வீட்டுக்கு வீடு தடுப்பூசி

தேசம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை மேலும் எடுத்து செல்வதில் அரசுக்கு உதவும் பல்வேறு பங்களிப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் உரையாடிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “தடுப்பூசி தொடர்பான சாதனைகள் அரசுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் சொந்தமானவை, என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கடைசி குடிமகன் வரை கொண்டு சேர்ப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து பாரதத்தை பாதுகாக்கும் முயற்சியில் கைகோர்க்க அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை வரவேற்கிறேன். சமூக விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் நேர்மறையான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒலி ஒளி உள்ளடக்கங்களை பயன்படுத்துவது, சமூக ஊடகங்கள் மூலம் தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம், கொரோனா தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதைகள், தவறான எண்ணங்கள், சந்தேகங்களை அகற்றுவது என அனைவரும் செயல்பட வேண்டும்’ என அழைப்பு விடுத்தார்.