குஜராத் மாநிலம் பரூச்சில் உள்ள ககாரியா கிராமத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வசவா சமூக பழங்குடியினரை, வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாக லண்டனில் வசிக்கும் உள்ளூர் நபர் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள், பழங்குடி சமூக மக்களிடையே உள்ள பலவீனமான பொருளாதார நிலை, கல்வியறிவின்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களை மதமாற்றம் செய்ய தூண்டியுள்ளனர். வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி இந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கையை கிராமத்தில் நீண்ட காலமாக செய்து வந்துள்ளனர். மேலும், இரு சமூகத்தினரிடையே பகையை ஏற்படுத்தி அமைதியை குலைக்கவும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என பரூச் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.