பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகள் கோவின் செயலி தொழில்நுட்பத்தை பாரத அரசிடம் இருந்து கடன் வாங்குவதற்கான இறுதிக் கட்ட விவாதங்களில் இறங்கியுள்ளன. இதனால், கோவின் செயலி விரைவில் உலகளாவிய ரீதியில் செல்ல உள்ளது. நமது மத்திய அரசு கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) தங்கள் தரப்பில் இருந்து ஏற்றுக்கொள்ளக் காத்திருக்கும் நாடுகளில் தென் அமெரிக்கா அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வடார், கயானா, பராகுவே, பெரு, சுரினாம், உருகுவே, வெனிசுலா ஆகியவை உள்ளன. கோவின் செயலியால் ஒரு நாளில் 2.5 கோடி தடுப்பூசிகள் முன்பதிவு கையாளப்பட்டு அதன் வெற்றி ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இச்செயலியால் ஒரு நொடிக்கு 800 தடுப்பூசிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கோவின் செயலி மத்திய அரசால் உரிமம் பெற்ற தயாரிப்பாக மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். ஆர்வமுள்ள அனைத்து நாடுகளுக்கும் இச்செயலி இலவசமாக, நிரந்தரமாக வழங்கப்படும். ஆனால், அதன் ஒரு நிபந்தனை, மென்பொருளை விற்பனைக்கு பயன்படுத்தவோ அல்லது மீண்டும் தொகுக்கவோ அனுமதிக்கக்கூடாது என்பதுதான்.