பெட்ரோல் விலை குறைக்க போராட்டம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கக் கோரி பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்படும். வெள்ளிக்கிழமை மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 5,000 நிவாரண நிதி வழங்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஸ்டாலினின் மழை வெள்ள பாதிப்பு நிகழ்ச்சி ஒரு டூரிஸ்ட் பேக்கேஜ் மாதிரி உள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு வெறும் ரூ. 20 ஆயிரம் நிவாரண நிதி கொடுப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், எதிர்கட்சித்தலைவராக இருந்தபோது ஒரு ஏக்கருக்கே ரூ. 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தினார். ஸ்ரீரங்கம் கோயிலில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து ஒருவரின் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது தவறு’ என கூறினார்.