விடியலின் வலிமை

தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு, வலிமை என்ற பெயரில் மலிவு விலை சிமெண்ட் மூட்டைகளை ரூ. 350 மற்றும் 365 என இரண்டு விலைகளில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இதுவரை விற்கப்பட்ட அம்மா சிமெண்ட் மூட்டையின் விலை ரூ. 210 மட்டும்தான். தவிர  தமிழகத்தில் தயாராகி மற்ற மாநிலங்களில் விற்கப்படும் தனியார் சிமெண்ட் மூட்டையின் விலை ரூ. 330 முதல் 400வரைதான் உள்ளது. ஆனால், அதே சிமெண்ட் மூட்டை தமிழகத்தில் ரூ. 550 என விற்கப்படுகிறது. பாரதத்திலேயே சிமெண்ட் மூட்டை விலை மிக அதிகமாக விற்கப்படுவது தமிழகத்தில் மட்டுமே என்பது விடியல் ஆட்சியின் பெருமை. ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் தமிழகத்தில் இருக்கையில், அவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை பதவியேற்ற ஒரு வாரத்திலேயே ஆரம்பித்துவிட்டது தி.மு.க அரசு. அது இன்றும் தொடர்கிறது. விடியல் வரும் என வாக்களித்தவர்களை நிரந்தமாக இருளில் தள்ளிவருகிறது தி.மு.க அரசு.