சபாநாயகர்கள் மாநாடு

சிம்லாவில் இன்று சபாநாயகர்கள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இத்தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இம்மாநாட்டில் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்றும், சட்டமன்றங்களில் ஒழுக்கம் கடைபிடித்தல், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சபாநாயகர்களின் அதிகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.