தி.மு.க அரசு பதவியேற்றது முதல் கோவை, மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில்களை இடித்துத்தள்ளி வருகிறது. தற்போது சிதம்பரம் கீழ வீதியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலும் தான்தோன்றி விநாயகர் கோயிலும் அரசு நிலத்தில் இருப்பதாககூறி அவற்றை இடித்துத்தள்ள முனைந்துள்ளது. இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல ஹிந்து அமைப்புகள், பா.ஜ.க கண்டனம் தெரிவித்தன. போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து கோயில் இடிப்பதை 9 மாதங்கள் தள்ளி வைத்துள்ளது தி.மு.க அரசு. ஆனால் முற்றிலும் விலக்கிக்கொள்ளவில்லை.
ஒருபக்கம் தன் கட்சிக்காரர்களை அறங்காவலர்களாக நியமித்து கோயில் சொத்தில் முறைகேடுகள், ஹிந்து அறநிலைய அதிகாரிகளாக மாற்று மதத்தினரை நியமித்து, அவர்கள் துணையுடன் கோயில் சொத்துகளில் முறைகேடுகள், சிலை கடத்தல், நகை திருட்டு, கோயில்களில் ஆகம விதிகள் மீறல், ஒழுங்கீனம், கோயில் சொத்துக்கள் களவு, கோயில் சொத்தில் சுகபோகம் என திராவிட அரசியல்வாதிகள் செய்யும் அநியாயங்களுக்கு அளவில்லை.
மறுபக்கம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல நூறு ஹிந்து கோயில்கள் சட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டுள்ளன. ஆகம விதியை மீறி அர்ச்சகர் நியமனம், கோயில் பணத்தில் சொகுசு வாகனம் என ஹிந்து விரோத செயல்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. சிலை கடத்தல், சாமி சிலைகள் உடைப்பு, ஹிந்து கோயில்கள் மற்றும் ஹிந்துக்கள் மீதான வன்முறைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இவை எல்லாம், முஸ்லிம் கொடுங்கோல் அரசர்களின் ஆட்சியை நினைவூட்டுகின்றன.
ஹிந்து கோயில்கள் இடிப்பில் வேகம் காட்டும் தி.மு.க அரசு, இதேபோல பல ஆண்டுகளாக சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ள மாற்றுமத வழிபாட்டுத் தலங்களை அகற்றுவதில் காட்டுவதில்லையே? இதற்கு, வியாசர்பாடி, அமைந்தகரை, கீழ்கட்டளை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சர்ச்சுகள், கோவை தர்கா என பல்லாயிரம் உதாரணங்களை சொல்லமுடியும். சில இடங்களில் இவற்றை இடிக்க நீதிமன்ற உத்தரவுகள் வந்தும் அவை செயல்படுத்தப்படாமல் உள்ளன. பல இடங்களில் வைக்கப்பட்டு உள்ள ஈ.வே.ரா, அண்ணா சிலைகளின் கதையும் இதுதான்.
அரசு அலுவலகம் உட்பட பல்வேறு கட்டடங்கள் கட்ட கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, அரசு கஜானாவிற்கு செல்லும் கோயில் வருமானம், நகையை உருக்கி பணமாக்கல் என கோயில்களின் சொத்தை ஏப்பம் விடும் தமிழக அரசு, தன் நிலத்தில் சிறிதை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கும் கோயில்களுக்கு விட்டுக் கொடுக்கலாமே? அரசு நிலத்தில் ஆலயங்கள் தவறு என்றால் ஆலய நிலத்தில் உள்ள அரசு கட்டடங்கள்? இல்லை, இடித்தே தீருவோம் என்றால் ஹிந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோயில்களை விட்டு அரசு வெளியேறலாமே?
மதிமுகன்