“அமிர்த மஹோத்ஸவத்தை” முன்னிட்டு ஜம்மு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த “பாரதத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு @ 100” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘மனநிலையை மறுசீரமைக்காவிட்டால், புதிய வழிகள் உகந்த பலனைத் தராது. பெரிய லட்சியங்கள் கொண்ட இன்றைய நவீன பாரதத்தில், இளைஞர்களுக்கான தற்போதைய தாரகமந்திரம் “லட்சியம், புதுமை மற்றும் போட்டி”. 21ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை 20ம் நூற்றாண்டு மனநிலையுடன் நாம் பெற முடியாது. உலகில் உள்ள எந்த அரசாங்கமும் அனைத்து இளைஞர்களுக்கும் அரசு வேலை வழங்க முடியாது, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொறுப்பான அரசாங்கம், அரசு வேலையை விட அதிக லாபம் தரும் வாழ்வாதாரத்தை வழங்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள, இளைஞர்கள் தங்கள் மனநிலையை அரசு வேலை எனும் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். இதனை பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டும். அரசு வேலை குறித்த பொய்யான உறுதிமொழிகளை அரசியல்வாதிகளும் வழங்கக்கூடாது’ என்றார்.