கிழக்கு லடாக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரெசாங் லா போர் நினைவிடத்தை இந்திய ராணுவம் புதுப்பித்துள்ளது. ரெசாங் லா போரின் 59வது ஆண்டு நினைவு நாளான வரும் நவம்பர் 18 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனை திறந்து வைக்கிறார். ரெசாங் லா போர் நினைவுச்சின்னம் முன்பு சிறியதாக இருந்தது, அது தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. லடாக் சுற்றுலாவில் இது முக்கியப் பகுதியாக இது இனி திகழும். இந்த புதிய போர் நினைவிடம் திறப்பு நவம்பர் 17 முதல் 19 வரை 3 நாள் நிகழ்ச்சியாக நடைபெறும். இதில், பாதுகாப்புப் படை அணிவகுப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.