பாரதம் ஏற்காது

அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீன கட்டுமான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க பென்டகன் அறிக்கைகளுக்கு பதிலளித்த பாரத அரசின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தனது பிரதேசத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை பாரதம் ஒருபோதும் ஏற்காது. சீனாவின் நியாயமற்ற உரிமைக் கோரல்களை ஏற்கவில்லை. என்று கூறியுள்ளது. சீனாவின் இது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தூதரக வழிகளில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். எதிர்காலத்திலும் அது தொடரும். சீனாவுடன் எல்லையில் உள்ள பகுதிகளில் சாலைகள், பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சியை பாரதமும் முடுக்கிவிட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான சாலைகள், பாலங்கள், இணையம் உள்ளிட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேச பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து கண்காணிக்கிறது. தேச இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம்’ என தெரிவித்தார்.