லட்சுமி பாய் சிலை திறப்பு

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் பெண்கள் கல்லூரியில், ராணி லட்சுமி பாய் சிலையை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ’21ம் நூற்றாண்டில், பெண்கள் மேம்பாடு மற்றும் பாலின சமத்துவம் குறித்து பல விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், இந்திய வரலாற்றில் பெண்களின் வீரம், தியாகம் மற்றும் சாதனைகள் நிறைந்த சம்பவங்கள் உள்ளன. இதில் ராணி லட்சுமி பாயின் சரிதையும் அதில் ஒன்று. ஆங்கில அடக்குமுறையை எதிர்த்தவர்களில் முக்கியமானவர் ராணி லட்சுமி பாய். அவரது வாழ்க்கையும் தேசியவாதமும் பாரதப் பெண்களை பல தலைமுறைகளாக ஊக்குவிக்கின்றன. இந்த சிலை, கல்லூரி மாணவிகளை ஊக்குவிக்கும். திரைப்படங்களிலும், கதைகளிலும் ராணி லட்சுமி பாய் புரட்சிகர சுதந்திர போராட்டக்காரராக மட்டுமே காட்டப்படுகிறார். அவர் ஆங்கில மொழியில் புலமை பெற்றிருந்தவர்களுக்கு சமமான அறிவாளியாகத் திகழ்ந்தார் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்’ என தெரிவித்தார்.