எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை. நாடு முழுவதும் எல்லாத் தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால், ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பதாகக்கூறி ஈ.வே.ராமசாமி, இந்திரா காந்தி, கருணாநிதி போன்றவர்கள் குறித்தோ இதேபோல அவரால் துணிந்து படம் எடுக்க இயலுமா? அவற்றை படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் அவற்றை இவரால் அடக்க முடியுமா? ஏழை மக்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் என்றால் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா, யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணமா? கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் பெயரை சொல்லவே பயப்படும் இவரை போன்றவர்களுக்கு ஹிந்துக்கள் என்றால் மட்டும் இளக்காரமா? என்பதையும் அவர் விளக்கினால் நன்று.