மதன் மோகன் மாளவியா காசி ஹிந்து பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டி பல செல்வந்தர்களையும், நவாப்புகளையும் சென்று சந்தித்தார். காசியை ஆண்ட நவாப்பின் அரண்மனைக்கும் சென்றார். நவாப் “பொருள் தர முடியாது” என்று சொல்லியதோடு காலணியைக் கழற்றி மாளவியா மீது எறிந்தான். மாளவியா காலணியை எடுத்துக்கொண்டு “மிக்க நன்றி” எனக் கூறி, வெளியே வந்தார். அரண்மனை வாசலில், நவாப் காலணியை ஏலம் விட்டார். இதைப் பார்த்த அரண்மனை அதிகாரி நவாப்பிடம் “அரசே உங்கள் காலணி குறைந்த விலைக்கு ஏலம் போடப்படுகிறது” என்றார். திடுக்கிட்ட நவாப், நிதியமைச்சரை அழைத்து, “என்ன செலவானாலும் சரி, அதனை ஏலத்தில் எடுங்கள்.” என ஆணையிட்டார். ஏலம் சூடு பிடித்தது. முடிவில் ஒரு லட்சம் வராகனுக்கு அச்செருப்பை ஏலம் எடுத்து மன்னரிடம் அளித்தார் நிதிமந்திரி. பின்னர் உள்ளே வந்த மதன்மோகன் மாளவியா, “அரசே செருப்பை எறிந்தமைக்கு மிகுந்த நன்றி. மற்றதை எறிந்தாலும் பெற்றுக் கொள்வேன்” என சொல்லிச் சென்றார்.