மிரட்டும் அமைச்சர்

கொளத்தூர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்த முதல்வர் ஸ்டாலினிடம் இரண்டு நாட்களாக மழை நீர் அகற்றப்படாதது குறித்த மக்கள் குறையை அப்பகுதி வாழ் மக்களோடு இணைந்து இந்து முன்னணி அமைப்பு மற்றும் பா.ஜ.கவை சார்ந்தவர்கள் சென்றனர். முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று கோஷம் எழுப்பினர். இதனையடுத்து காரில் இருந்து இறங்கிவந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ‘என்ன அரசியல் செய்கிறீர்களா, தொலைத்து விடுவேன்’ எனகூறி  மிரட்டியுள்ளார். ஸ்டாலின் அங்கிருந்து சென்றபிறகு, மனுவில் இருந்த இந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் இளங்கோவனின் அலைபேசிக்கு  94451 90115 என்ற எண்ணில் இருந்து தொடர்புகொண்ட அமைச்சர் சேகர் பாபு, ‘எப்படி ‘பாரத் மாதாகீ ஜெய்’ என கோஷம் போடலாம் என கேட்டார்? அதற்கு இளங்கோவன், ‘பாரத அன்னை வெல்க’ என்று தானே கோஷம் போட்டோம் அதில் என்ன தவறு இருக்கிறது? இந்த கோஷம், முதல்வர் கவனத்தை கவர்வதற்கு மட்டுமே என்றும் எடுத்துரைத்தார். அதற்கு, அமைச்சர் ‘வேற மாதிரி ஆக்கிடுவேன்’ என இளங்கோவனை மிரட்டினார். ஒரு அமைச்சரான தாங்கள், புகார் கொடுக்க வந்தவர்களை போன் போட்டு மிரட்டுகிறீர்களா, ஒரு அமைச்சர் மாதிரி நடந்துகொள்ளுங்கள் என கூறியதும் உடனடியாக இணைப்பைத் துண்டித்துவிட்டார் சேகர்பாபு. இந்த எண்ணை ‘ட்ரு காலரில்’ தேடியபோது ரவிவர்மன் என்ற பெயர் வந்தது. இதனையடுத்து மிரட்டல் விடுத்த அமைச்சர் சேகர்பாபு மீது கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. முதல்வர் தனது அராஜக அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பாரா?