பாரதத்தை நோக்கிய பார்வை

சீன இணையம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான அந்நாட்டு அரசின் மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளால், அங்கு முதலீடு செய்ய விரும்பும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தைகளைக் கண்டறியும் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் பார்வை தற்போது பாரதத்தை நோக்கித் திரும்பியுள்ளது. அவர்கள் பாரதத்தின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடுகள் செய்கின்றனர். இதனால் கடந்த ஜூன் மாதத்தில் 1.6 பில்லியன் டாலராக இருந்த முதலீடு ஜூலையில் 8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பாரதத்தில் வென்ச்சர் கேபிடல் நிறுவன ஒப்பந்தங்கள் சீனாவைவிட அதிரித்து உள்ளது. சீன தொழில்நுட்பத் துறையில் நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்து சுழன்று வருவதால், அங்கு செய்திருந்த முதலீடுகள் சுமார் 1.5 டிரில்லியனாக குறைந்துவிட்டது என புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.