ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற உதவிய இந்திய இடைத்தரகர் சுஷன் குப்தா என்பவருக்கு பிரான்சின் டசால்ட் நிறுவனம் போலி ரசீதுகள் மூலம் ரூ. 650 கோடி கமிஷன் கொடுத்திருப்பதாக பிரான்ஸ் புலனாய்வு இதழான மீடியாபார்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கமிஷன் கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. மேலும் ரபேல் மட்டுமின்றி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்திலும் சுஷென் குப்தா இடைத் தரகராக பணம் பெற்றிருக்கிறார். இதற்காக அவர், மொரீஷியசில் ‘இன்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ்’ என்ற போலி நிறுவனத்தை துவக்கினார் என தெரிவித்துள்ளது. அப்போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், தற்போது வெளியான இந்த அறிக்கை, காங்கிரஸ் கட்சிதான் இதில் ஊழல் செய்துள்ளது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.